தாய்மொழிக் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கல்விச் செல்வமாக அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து பேசக் கற்றுக் கொண்டு அதன்வழியாகவே சிந்திக்கவும் செயல்படவும் கருத்துகளைப் பரிமாறவும் செய்கின்றனர். அவ்வகையில் தமிழ்மொழி நீண்ட நெடிய இலக்கியவளம், பண்பாட்டுக் கூறுகள் ஆகியனவற்றைக் கொண்டு விளங்குவதால், தமிழ் இலக்கியங்களைப் பயில்வது ஆகச் சிறந்த வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்குகிறது எனலாம்.
தமிழ் (இளங்கலை)
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம், நூல்வெளியீடு, கல்லூரி மற்றும் மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் என அனைத்திற்கும் தயார்படுத்துவதில் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு சிறந்த முறையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்ப் பண்பாடு சார்ந்த பள்ளிகளில் தமிழுக்கு வரவேற்பு உள்ளதால் உலகளாவிய பணிவாய்ப்புக்கும் தமிழ் இலக்கியம் பயிலவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகள், மொழி வல்லுநர்களின் பயிலரங்குகள் வாயிலாக மாணவர்களுக்கு தனித்திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் நோக்கில் சிறந்த நூலகக் கட்டமைப்புடன் தமிழ்துறையானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடுதலாக தேசிய மாணவர்ப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், விளையாட்டுத்துறை ஆகியவற்றில் மாணவர்களை பங்கு பெறசெய்து மாணவர்கள் பணிவாய்ப்புகளைப் பெற தனி கவனம் செலுத்துகிறது.
S. No. |
Course |
Fees per Year |
Intake |
---|---|---|---|
1 | B.A Tamil | ₹ 30,000 | 50 |
Eligibility
A Pass in +2/HSC (or equivalent) with “Tamil” as one of the subjects